சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய கிர்கிஸ்தான் மருத்துவ மாணவி கைது: போலீஸ் அதிரடி நடவடிக்கை

சென்னை: சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய மருத்துவ மாணவி கைது செய்யப்பட்டார். பள்ளிக்கரணை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் இமானுவேல்(40). இவர், கடந்த  இரண்டு  மாதங்களுக்கு முன் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், தான் சார்ந்துள்ள மதம் குறித்து மதுஷியா(28), என்பவர் சமூக வலைதளத்தில் அவதூறான செய்திகளை பரப்பி வருவதாக கூறி இருந்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்முடிவில், அந்த பெண் இலங்கையை சேர்ந்த  மதுஷியா என்பதும். இவர் பெங்களூருவில் தன் கணவர் அபினவ் குமார் சிங்குடன் வசிப்பதும், ரஷ்யாவில் மருத்துவம் படித்து வருவதும் தெரியவந்தது.

மேலும், மதுஷியா பதிவிட்ட வீடியோக்களில் பெரும்பாலானவை, கிர்கிஸ்தான் நாட்டிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில், சிவகாசியை சேர்ந்த பெண் ஒருவர் மதுஷியா மீது, தன்னை பற்றி அவதூறு பரப்பியதாக புகார் கொடுத்தார். அப்புகாரின்பேரில், கைது செய்யப்பட்ட மதுஷியா சென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பது  பள்ளிக்கரணை போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, இமானுவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுஷியாவை மீண்டும்  கைது செய்த போலீசார், அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவின்பேரில், மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: