கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு பயணிகள் செல்ல தடை

சென்னை: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் நேற்று அதிகாலை காட்டு யானை கூட்டம் புகுந்தது. இதையடுத்து கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். இதுபற்றி வனத்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘‘பாதுகாப்பு கருதி இந்த பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. யானைகள் இந்த பகுதியை விட்டு சென்ற பின்னர் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர்’’ என்றார்.

Related Stories: