ஊட்டி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபரை போலீஸ் தேடுகிறது

ஊட்டி: ஊட்டி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மத்திய பஸ் நிலையம் அருகே ரயில் நிலையம் அமைந்துள்ளது.நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஊட்டியில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்திற்கு போன் செய்த மர்மநபர், ஊட்டி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் எந்த நேரத்திலும் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு உடனடியாக அழைப்பை துண்டித்துள்ளார். மாவட்ட எஸ்பி ஆசிஷ் ராவத் உத்தரவின்பேரில் உடனடியாக மோப்பநாய் மற்றும் வெடிபொருட்களை கண்டறியும் நிபுணர்கள் ஊட்டி ரயில் நிலையத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின் வெறும் புரளி என தெரியவந்தது. சைபர் கிரைம் உதவியுடன் வெடிகுண்டு மிரட்டல் என வந்த எண்ணை கண்டறிந்து தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அந்த எண் கோவையில் இருப்பதாக காட்டியது. இதனைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

Related Stories: