போதைப்பொருள் கடத்திய உகாண்டா பெண் கைது

சென்னை: எத்தியோபியாவில் இருந்து போதைப்பொருள் கடத்திவந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடீஸ் அபாபாவில் இருந்து சென்னைக்கு 217 பயணிகளுடன் சர்வதேச விமானம் நேற்றுமுன்தினம் வந்தது. உகாண்டா நாட்டை சேர்ந்த நம்பீரா நோலீன் என்ற பெண் பயணி மருத்துவ விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தடுத்து நிறுத்தினர். அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். இதையடுத்து அந்த பெண்ணை தனியறைக்கு அழைத்துச்சென்று பெண் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.அவருடைய உள்ளாடைகள் மற்றும் உடலுக்குள் கொக்கையின் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். சுங்க அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். அதன்எடை 3.250 கிலோ. சர்வதேச மதிப்பு சுமார் ரூ.8.3 கோடி. சுங்க அதிகாரிகள் அந்தப் பெண்ணை கைது செய்தனர்.

Related Stories: