மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: மாவட்டஆட்சித்தலைவர் அறிவிப்பு

சென்னை: பல்வேறு அரசுதுறைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களைகளைய பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைத்த முகாம்கள்,கீழ்கண்ட தேதியில் நடைப்பெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், உள்ள நாளதுவரை தேசியஅடையாள அட்டைபெறாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் UDID அட்டைபெறாத மாற்றத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்டஆட்சித்தலைவர் இச்சிறப்பு முகாம் S.அமிர்தஜோதி, இ.ஆப.,அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம் நடைபெறும் இடங்கள்:

06.10.2022-ல் தண்டையார் பேட்டை மற்றும் இராயபுரம், 07.10.2022-ல் பெருங்குடி, 11.10.2022-ல் ஆலந்தூர், 12.10.2022 சோழிங்கநல்லூர், 15.10.2022-ல் வளசரவாக்கம் மற்றும் 17.10.2022-ல் அம்பத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.   

மேற்குறிப்பிட்ட தேதிகளில் அதற்கெதிரே குறிப்பிட்டுள்ள மண்டலங்கள் மற்றும் வார்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள பகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் (மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, மருத்துவர் சான்றிதழ்,  புகைப்படம்) ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை பூரத்தி செய்து தங்களுக்கு தேவையான UDID அட்டை பெற்றுக்கொள்ளுமாறும், நாளதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் ஆதார் அட்டை மற்றும் 5 புகைப்படத்துடன் கலந்துகொள்ளவும் கூறியுள்ளனர்.

மேலும் மேற்படி முகாமில் பல்வேறுதுறை அலுவலர்கள் மூலம் நலத்திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படும் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத்திட்டத்தின் கிழ் தவினசெயற்கை அவையங்கள் முகாம் நடைபெறும் இடத்திலேயே அளவீடுகள் செய்யப்படும் என்பதனாலும் மாற்றுத்திறனாளிகள் வந்து பயனடையுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் S.அமிர்த ஜோதி, இ.ஆ.ப அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: