நீட் குளறுபடி அசல் விடைத்தாள் காட்ட ஆணை: தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீட் தேர்வு குளறுபடி வழக்கில் மாணவிக்கு அசல் விடைத்தாளை காட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு, அசல் விடைத்தாளை காண்பிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த ஜூலை மாதம் 31-ம் தேதி வெளியானது என்றும் அதில் 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். செப் 7-ல் வெளியான நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிடத்தப்பட்டுள்ளது என்று மனு அளித்தனர். விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டதா என சரிபார்க்க அசல் விடைத்தாளை காண்பிக்க தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு அளித்தனர்.

இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி அசல் விடைத்தாளை காண்பிக்க வேண்டும் என்று உத்தரவு அளித்துள்ளனர். நொய்டாவில் உள்ள தேசிய முகமை அலுவலகத்திற்கு வந்தால் விடைத்தாளை காண்பிக்க தயார் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.  விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க அசல் விடைத்தாளை காண்பிக்க தேர்வு முகமைக்கு உத்தரவிடக்கோரிய மனுவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: