பூதப்பாண்டியில் பரபரப்பு: அங்கன்வாடி மையத்தில் மீண்டும் பாம்பு புகுந்தது

பூதப்பாண்டி: பூதப்பாண்டி மேலரத வீதியில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் ேமற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று காலை அங்கன்வாடியை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் திறந்தனர். பின்னர் பொருட்கள் சேமித்து வைத்திருந்த அறையையும் திறந்துள்ளனர். அப்போது அறையினுள் 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு ஒன்று சுருண்டு கிடந்தது.  இதனை கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்தனர். இதையடுத்து குழந்தைகளும் வகுப்பை விட்டு வெளியே அழைத்து வரப்பட்டனர்.

இந்த தகவல் அறிந்ததும் குழந்தைகளின் பெற்றோர் பதற்றத்துடன் ஓடி வந்தனர்.  பின்னர் அழகியபாண்டியபுரம் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் கவின் ஆகியோர் பாம்பை லாவகமாக பிடித்தனர்.

இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் தணிந்தது. இந்த அங்கன்வாடியை ஒட்டியே விஏஓ அலுவலகம்,  ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை செயல்படுகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அங்கன்வாடியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பும் ஒரு பாம்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: