குடிநீர் குழாய் சீரமைப்பு

வடலூர்: வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25வது வார்டு நடேசன் நகர் பகுதியில் நேற்று குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வழிந்தோடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வடலூர் நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்பேரில் நகர்மன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்யுமாறு நகராட்சி நகர்மன்ற தலைவர் சிவக்குமார் நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.  

அதன் பேரில் நகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயை சரி செய்தனர். இதையடுத்து குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. உடைந்த குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்த நகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: