பிறந்தநாளையொட்டி நூதனமுறையில் வாலிபருக்கு மாட்டு சாணம் அபிஷேகத்துடன் வாழ்த்து கூறிய நண்பர்கள்: வீடியோ வைரல்

செஞ்சி: செஞ்சியில் வாலிபர் ஒருவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மீது மாட்டு சாணம் ஊற்றி நீண்ட நாள் வாழ நணபர்கள் அபிஷேகம் செய்தனர். சமூகவலைதளத்தில் பரவி வரும் இந்த வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி (22). ஆட்டோ டிரைவர். இவருக்கு நேற்று இவருக்கு பிறந்தநாள். இதையொட்டி நோய் நொடி தாக்காமல் ஆரோக்கியமாக இருப்பதற்காக தண்டபாணி மீது அவரது நணபர்கள் மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றி அபிஷேகம் செய்து நூதனமுறையில் பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிறந்த நாளில் கேக் வெட்டுவதும், மது அருந்துவதுமாக கொண்டாடி வரும் இளைஞர்கள் மத்தியில் நூதனமான முறையில் மாட்டு சாணத்தை கரைத்து நண்பர் மீது ஊற்றி நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என வாழ்த்து தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: