தாபாவில் லோடு ஆட்டோவை ஏற்றி பஞ்சாபி பாடகர் மீது கொலை வெறி தாக்குதல்: சாப்பிட போன இடத்தில் விதி விளையாடியது

மொஹாலி: பஞ்சாப் தாபாவில் சாப்பிட சென்ற பாடகர் மீது லோடு ஆட்டோவை ஏற்றி நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் மொஹாலி அடுத்த ராய்பூர் ராணியை சேர்ந்த விக்கி பால்  என்பவர், அதேபகுதியில் இருந்த தாபாவில் பணியாற்றி வந்தார். குடிப்பழக்கம்  கொண்ட விக்கி பால், தாபாவில் சரியாக வேலை செய்வதில்லை.

இதனால் தாபாவின்  உரிமையாளர், விக்கி பாலை பணியில் இருந்து நீக்கினார். இந்த நிலையில்  தாபாவில் இருந்த தனது பைக்கை எடுப்பதற்காக விக்கி பால் அங்கு போதையில்  சென்றார். அப்போது அங்கு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பஞ்சாபி பாடகர்  அமன்ஜோத் சிங் பன்வார் என்கிற அல்பாசிடம், தனக்கு நேர்ந்த பிரச்னை குறித்து  எடுத்துக் கூறினார். அதற்கு அப்லாஸ், உனது முதலாளியிடம் ேபசித் தீர்த்துக்  கொள்ளுமாறு கூறினார். ஆனால் அல்பாசின் பதிலில் விக்கி பால் திருப்தியடையவில்லை.  பின்னர் தாபா பகுதியில் நின்றிருந்த லோடு ஆட்டோவை எடுத்து கொண்டு விக்கி பால் வேகமாக  ஓட்டி வந்தார்.

அங்கு அமர்ந்திருந்த அல்பாஸ் மீது லோடு ஆட்டோவை ஏற்றினார்.  அதனால் சுமார் 10 அடி தூரத்திற்கு அல்பாஸ் தூக்கி வீசப்பட்டார்.  படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  தற்போது அவரது தலை மற்றும் முதுகு தண்டு பகுதியில் பலத்த காயம்  ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விவகாரம்  தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விக்கி பாலை சொஹானா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாபாவுக்கு சாப்பிட போன இடத்தில், எவ்வித பிரச்னையும் செய்யாத பாடகர் அப்லாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: