பாகிஸ்தானுக்கு எதிரான 7வது டி.20 போட்டி; 67 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி: 4-3 என தொடரை கைப்பற்றியது

லாகூர்: பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் இடையே 7 வது மற்றும் கடைசி 20 போட்டி நேற்று லாகூரில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 209 ரன் எடுத்தது. பில் சால்ட் 20, ஹேலஸ் 18 . பென் டக்கெட் 30 ரன்னில் ஆட்டம் இழந்த நிலையில் டேவிட் மாலன் 78 (47 பந்து, 8பவுண்டரி, 3 சிக்சர்), ஹாரி புரூக் 46 ரன் (29 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து களத்தில் இருந்தனர்.

பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களே எடுத்தது. ஷான் மசூத் 56, குஷ்தில் ஷா 27, இப்திகார் அகமது 19 ரன் எடுக்க மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகினர். இதனால் 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து 4-3 என தொடரை கைப்பற்றியது. இங்கிலாந்து பவுலிங்கில் கிறிஸ் வோக்ஸ் 3, டேவிட் வில்லி 2 விக்கெட் வீழ்த்தினர். டேவிட் மாலன் ஆட்டநாயகன் விருதும், புரூக் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

Related Stories: