குடும்ப தகராறில் விபரீதம்: மனைவியை கொன்று கணவர் தற்ெகாலை

பல்லடம்: பல்லடம் அருகே குடும்ப தகராறில் மனைவியை கொன்று, கணவன் தற்கொலை செய்து கொண்ட பயங்கரம் நடந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (55) இவரது மனைவி புஷ்பவதி (50) நேற்று காலை வழக்கம்போல இவர்கள் வீட்டிற்கு பால் கொடுப்பதற்காக பால்காரர் வந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அழைத்துப் பார்த்தும் யாரும் வராததால், பக்கத்து வீட்டில் இதுகுறித்து சொல்லி உள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது தங்கவேல் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். அருகே புஷ்பவதி இறந்து கிடந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் தம்பதிக்கிடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகவே மனைவியை கொலை செய்து விட்டு தங்கவேல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: