தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேர் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு: 3 பேர் சடலமாக மீட்பு

தஞ்சை : தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் 6 பேரை அடித்துச் செல்லப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் இருந்து திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா கோயிலுக்கு வந்த பக்தர்கள் ஆற்றில் குளித்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் 40 பேர் பூண்டிமாதா கோயிலுக்கு சுற்றுலாவிற்காக வந்தவர்கள் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அதில் உள்ள 6 பேர் நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டனர். அதில் சார்லஸ் மற்றும் பிரதீப் ஆகிய 2 பேரின் உடலை தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர். அதில் மீதமுள்ள 4 பேரின் உடலை தேடி வந்த நிலையில் 3-வதாக தாவுத் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். மீதமுள்ள 3 பேரின் நிலை என்ன என்பது குறித்து திருக்கட்டு பள்ளியை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் 20-க்கு மேற்பட்டோர் தீவிர தேடலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் பூண்டிமாதா கோயில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories: