×

கம்பு வடை

செய்முறை:

கம்பை கல், மண் இல்லாமல் சுத்தம் செய்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸியில் ஊற வைத்த கம்பு, வரமிளகாய், சோம்பு சேர்த்து ரவை பதமாக அரைத்து எடுக்கவும். அரைக்கும் பொழுது சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நறுக்கி வைத்தவற்றை சேர்த்து அதோடு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசையவும். இலை அல்லது பாலிதீன் பேப்பரில் எண்ணெய் தடவி எலுமிச்சை அளவு மாவை எடுத்து அதிரசம் தட்டுவது போல தட்டி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து தட்டிய வடைகளை போட்டு சிவக்க வேக வைத்து எடுக்கவும். சுவையான கம்பு வடை தயார்.

Tags :
× RELATED பலாப்பழத்தின் பயன்கள்!