வட மாநிலங்களில் களைகட்டியது நவராத்திரி கொண்டாட்டம்: தாண்டியா, காப்ரா நடனமாடி மக்கள் உற்சாகம்

டெல்லி : வட மாநிலங்களில் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. முதலமைச்சரிலிருந்து சாமானியன் வரை தாண்டிய மற்றும் காப்ரா நடனம் ஆடி பண்டிகையை விமர்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். நவராத்திரி பண்டிகையின் 8-வது நாளான நேற்று ராய்பூரில் உள்ள சட்டிஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் வீட்டில் சிறப்பு பூஜைக்கு ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது. முதலமைச்சர் பூபேஷ் பாகல் பூஜையில் பங்கேற்ற பின் உற்றார் உறவினர்களுடன் ஆட்டம் பாட்டத்தில் ஈடுப்பட்டார். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அவருடன் உற்சாகமாக தாண்டிய நடனம் ஆடினர். குஜராத் மாநிலம் சூரத்தில் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு தாண்டிய ஆட்டம் ஆடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

ராஜஸ்தானில் ஜோத்பூரில் நடந்த நவராத்திரி விழாவில் மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயல் தனக்கே உரிய பாணியில் நடனம் ஆடி அசத்தினார். மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நவராத்திரி பண்டிகையின் போது துர்கா பூஜை விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். திரிபுராவில் அகர்தலாவில் துர்கா பூஜையை முன்னிட்டு சிறப்பு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேற்கு வங்கத்தில் கொல்கத்தா, டெல்லியில் உள்ள சண்டேவாளன் கோவில் மற்றும் மும்பையில் உள்ள மும்பாதேவி கோவில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

Related Stories: