மீண்டும் ஏற்றமடையும் நகை விலை!: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.37,640-க்கு விற்பனை.. பீதியில் நகை பிரியர்கள்..!!

சென்னை:  தங்கத்தின் விலை இன்று எதிர்பாராத வகையில் மீண்டும் உயர்வை  கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.37,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,705-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.62.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம் என்றாலே பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம். இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலையானது சரிவுடன் விற்பனை செய்யப்பட்டது. அதாவது சவரனுக்கு ரூ.50 குறைந்து ரூ.37,520-க்கும், கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,690-க்கும் விற்பனை ஆனது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட் விடுமுறை.

அதனால் தங்கவிலையில் மாற்றமின்றி அதேயிலையில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கடந்த மாதம் முழுவதும் சரிவுடன் விற்பனையான தங்கவிலையால் மக்கள் அதீத மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் நகைவாங்கும் ஆர்வமும் மக்களிடம் அதிகரித்தது. இந்நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதாவது  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.37,640-க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,705-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்க மக்கள் சற்று தயக்கம் காட்டி வருகின்றனர்.

Related Stories: