தி.மலை ஆரணி அருகே பெண் ஊராட்சித் தலைவர் பட்டியல் சாதி என்பதால் கூட்டத்தை நடத்த விடாமல் விரட்டியடிப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பட்டியல் சாதியை சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தை நடத்த விடாமல் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தி பிறந்த நாளான நேற்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பாளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் கூடியது. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக உள்ள பட்டியல் சாதியை சேர்ந்த சித்ரா ஏழுமலை கூட்டத்தை தலைமை ஏற்றி நடத்தினார்.

சிறப்பு அழைப்பாராக வட்டார வளர்ச்சி திட்ட துணை அலுவலர் லோகநாதன் பங்கேற்றார். ஆனால், அங்கு குடிபோதையில் வந்த சிலர் கூட்டத்தை நடத்த விடமால் அங்கு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவறிந்து போலீசாரும் அங்கு விரைந்து சென்றனர். பட்டியல் பிரிவை சேர்ந்த ஊராட்சி தலைவர் சித்ரா ஏழுமலையை அங்கிருந்த பிற சாதிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பேச விடாமல் கூட்டத்தில் இருந்து விரட்டி அடித்தனர். தம்மை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்ய விடாமல் தடுப்பதாக ஊராட்சி தலைவர் சித்ரா ஏழுமலை குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: