வெகுவாக குறைந்த கொரோனா பாதிப்பு; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,011 பேருக்கு பாதிப்பு உறுதி.! 28 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் வெளியான சுகாதாரத்துறை அறிக்கையின் படி, புதிதாக 3,805 பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியானது, நேற்று புதிதாக 3,375 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்த நிலையில் இன்று 3,011 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை 4,45,97,498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது 36,126 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,301 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். இதனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,40,32,671 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வெளியான சுகாதாரத்துறை அறிக்கையின் படி, கொரோனா பாதிப்பு காரணமாக 18 பேர் பலியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 28 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் அதிகபட்சமக 20 பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,701 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: