ஆயுதபூஜை எதிரொலி: குமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு.. ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500க்கு விற்பனை..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை சந்தையில் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. தென் தமிழகத்தில் மிகவும் முக்கியமான  மலர் சந்தை குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். பண்டிகை காலங்களில் அதிக அளவில் பூக்கள் இந்த சந்தைக்கு கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகிறார்கள். இந்நிலையில், ஆயுதபூஜை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி தோவாளை சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. தோவாளை மலர் சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 120 டன் பூக்கள் விற்பனைக்காக வந்துள்ளன.

வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பூக்களை போட்டி போட்டு வாங்கி செல்வதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.40க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வாடாமல்லி இன்று ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு ரூபாய் தாமரை ரூ.10க்கும், 40 ரூபாய் அரளி ரூ.350க்கும், 70 ரூபாய் சம்பங்கி ரூ.250க்கும் விற்பனை செய்யப்படுகிறது. செவ்வந்தி ரூ.100ல் இருந்து ரூ.300 ஆகவும், ரோஜா ரூ.100ல் இருந்து ரூ.300 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.1,000க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ இன்று ரூ.1,500க்கும், ரூ.900க்கு விற்ற பிச்சி ரூ.1,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: