திருவள்ளூரில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இடித்து தள்ளப்பட்ட ராட்சத தீண்டாமை சுவர்: கும்மிடிப்பூண்டியில் போலீசார் குவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட தோக்கமூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தில் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு ஆதி திராவிட குடியிருப்பை ஒட்டி ஊர் பெரியவர்கள் சிலர் 90 அடி நீளத்திற்கும், 8 அடி உயரத்திற்கும் சுவர் ஒன்றை எழுப்பினர்.

இந்த சுவர் தீண்டாமை சுவர் என கருத்தில் கொண்டு இதனை அகற்ற வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை இயக்கம் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து இருந்தனர். அந்த கிராமத்து மக்களும் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில், இந்த தீண்டாமை சுவர் இன்று காலை 5 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரை கொண்டு வருவாய்த்துறையினர் 5க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்துத்தள்ளினர்.

Related Stories: