புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம்: பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சீருடையில் பங்கேற்பு

புதுச்சேரி: புதுவையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் சீருடையில் பங்கேற்றனர். புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நேற்று மாலை நடைபெற்றது. காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை செல்வகணபதி எம்பி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாநில பாஜக தலைவர் சாமிநாதன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், வெங்கடேசன், அசோக்பாபு, சிவசங்கரன் ஆகியோர் ஆர்எஸ்எஸ் சீருடையான காக்கி பேன்ட், வெள்ளை சட்டை, குல்லா அணிந்தபடி பங்கேற்றனர்.

ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்சி வீதி, மறைமலையடிகள் சாலை வழியாக சுதேசி மில் அருகே நிறைவடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர். தொடர்ந்து, அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் (மத்திய அதிவிரைவுப்படை போலீசார்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: