×

விஜய் சேதுபதி நடித்த மவுன படம்: அடுத்த ஆண்டு வெளியாகிறது

மும்பை: ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் படம், ‘காந்தி டாக்ஸ்’. இது வசனம் இல்லாத மவுன படம் என்பது குறிப்பிடத்தக்கது. பிளாக் காமெடி ஜானரில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இதில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், அரவிந்த்சாமி, சித்தார்த் ஜாதவ் நடித் துள்ளனர். விஜய் சேது பதி, அரவிந்த்சாமி, அதிதி ராவ் ஆகிய மூவரும் இதற்கு முன்பு  மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்திருந்தனர். தற்போது அவர் கள் ‘காந்தி டாக்ஸ்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இது மவுன படம் என்பதால், அனைத்து மொழியிலும் வெளியிடுகின்றனர். கிஷோர் பி.பெலேகர் இயக்கியுள்ளார். அவர் கூறியதாவது:

மவுன படம் என்பது வித்தை காட்டும் செயல் அல்ல. இது கதை சொல்லலின் இன்னொரு வடிவம். பேசுகின்ற மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு, உணர்ச்சிகளை மட்டுமே வெளிப்படுத்துவது என்பது மிகவும் கடினமான விஷயம் மட்டுமல்ல, சவாலான சுவாரஸ்யமும் கூட. இப்படத்தின் கதை தனித்துவமானது. அனைவரும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புப்படுத்தி பார்க்கக்கூடியது. கமர்ஷியல் அம்சங்களுடன் பொழுதுபோக்கு விஷயங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படம், வரும் 2023ல் உலகம்  முழுவதும் வெளியிடப்படுகிறது.

Tags : Vijay Sethupathi , Vijay Sethupathi starrer Mauna: Releasing next year
× RELATED என்னைப்போல் சினிமாவை நேசிக்கும் விஜய் சேதுபதி: கமல்ஹாசன் பெருமிதம்