இப்போது திருமணம் இல்லை: ராஷ்மிகா

ஐதராபாத்: வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்து சுகுமார் இயக்கும் ‘புஷ்பா 2’ படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இந்தியில் அமிதாப் பச்சனுடன் அவர் நடித் துள்ள ‘குட் பை’ படம் வரும் 7ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து சித்தார்த் மல்ஹோத்ராவுடன் ‘மிஷன் மஜ்னு’, ரன்பீர் கபூருடன் ‘அனிமல்’ ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்தநிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனது முன்னாள் காதலன் மற்றும் பழைய தோழிகளுடன் முன்பிருந்த அதே நட்பை தொடர்ந்து வருவதாக கூறியுள்ளார். கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தில் ரக்‌ஷித் ஷெட்டியுடன் ராஷ்மிகா இணைந்து நடித்தபோது ஏற்பட்ட நட்பு, பிறகு காதலாக மாறியது. இதையடுத்து அவர்களுடைய காதல் திருமண நிச்சயதார்த்தம் இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்தது.

ஆனால், திடீரென்று ரக்‌ஷித் ஷெட்டியுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு காரணமாக, அவருடனான உறவை முறித்துக்கொண்டு, நடக்க இருந்த திருமணத்தையும் நிறுத்திவிட்டார். இதையடுத்து மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று சொன்ன ராஷ்மிகா, சில வரு டங்களுக்கு முன்பு தனக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ரக்‌ஷித் ஷெட்டிக்கு டிவிட்டரிலேயே நன்றி தெரிவித்தார். இந்நிலையில், மீண்டும் அவர்கள் இணைந்து நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கன்னடத்தில் நடிப்பதை திட்டமிட்டு தவிர்த்துவிட்ட ராஷ்மிகா, தெலுங்கில் அறிமுகமாகி நிறைய படங்களில் நடித்தார். அதில் சில படங்கள் பெரிய ஹிட்டானதால், அவருடைய சம்பளம் கோடிகளில் உயர்ந்தது. இந்நிலையில், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ ஆகிய படங்களில் நடித்திருந்த ராஷ்மிகா, அவருடன் நெருங்கிப் பழகினார்.

அவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் இணைந்து சென்று வந்தனர். ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது கூட ஒன்றாகவே சுற்றினர். இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிப்பதாக வும், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால், இன்னமும் அவர்கள் தங்கள் காதலை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. சமீபத்தில் ராஷ்மிகா அளித்த பேட்டியில், ‘தற்போது யாருடனும் நான் நெருங்கிய தொடர்பில் இல்லை. யாரையும் நான் காதலிக்கவும் இல்லை. நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறேன்’ என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது, தனது முன்னாள் நண்பர்கள், தோழிகள், குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீது முன்பு இருந்த அதே நட்பையும், பாசத்தையும் வைத்திருப்பதாக சொன்னார்.

Related Stories: