முலாயம் சிங் ஐசியுவில் அனுமதி

புதுடெல்லி: சமாஜ்வாடி கட்சி நிறுவனரான முலாயம் சிங் உடல் நிலை கவலைக்கிடமானதைத் தொடர்ந்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் (வயது 82), உடல் நலக் குறைவால் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அவரது உடல் நிலை கவலைக்கிடமானது.

இதனால் உடனடியாக அவர் ஐசியு வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், முலாயம் சிங்குக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிப்பதாகவும் சமாஜ்வாடி கட்சி வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. மு.க.ஸ்டாலின் கவலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டிவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் உடல்நலன் குறித்துக் கவலைகொள்கிறேன். அவர் முழுமையாக விரைந்து நலம்பெறுவார் என நம்புகிறேன்’ என கூறி உள்ளார்.

Related Stories: