கர்நாடகாவில் வரும் 6ம் தேதி ராகுல் யாத்திரையில் சோனியா பங்கேற்பு

புதுடெல்லி: ராகுல் நடத்தி வரும் பாதயாத்திரையில் வரும் 6ம் தேதி சோனியா காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை பயணம்’ என்ற பெயரில் ராகுல் காந்தி நடை பயணத்தை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை, கேரளா வழியாக தற்போது கர்நாடகா மாநிலத்துக்குள் நுழைந்து உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 21 நாட்களில் சுமார் 511 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி யாத்திரை செல்ல உள்ளார். இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் தினமும் பங்கேற்று வருகின்றனர்.

அடுத்த ஆண்டு கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை அமைக்க காங்கிரஸ் வியூகம் அமைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராகுல் யாத்திரையை அம்மாநில காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. இந்த யாத்திரைக்கு கூடுதல் வலுசேர்க்கும் விதகமாக வரும் 6ம் தேதி சோனியா காந்தியும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராகுல் யாத்திரை தொடங்கியபோது, மருத்துவ பரிசோதனைக்காக சோனியா காந்தி வெளிநாட்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: