பிளாஸ்டிக் குடோனில் தீவிபத்து

தண்டையார்பேட்டை: மயிலாப்பூர் லேடி ஜெசிகா சாலையை சேர்ந்தவர் வீரன் மேத்தா (58). மண்ணடி முத்துமாரி செட்டி தெருவில் பிவிசி பைப் குடோன் நடத்தி வருகிறார். இங்கு 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் குடோனை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில், குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், மாவட்ட தீயணைப்பு அதிகாரி லோகநாதன் தலைமையில் திருவல்லிக்கேணி, வியாசர்பாடி, உயர் நீதிமன்றம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் குடோனில் இருந்த பிவிசி பைப்புகள் எரிந்து நாசமாயின. எஸ்பிளனேடு போலீசார் விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ விபத்தின் போது சுற்றுப் பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண்ணெரிச்சல் ஏற்பட்டது. இதில், பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்தால், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: