இலகு ரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் இன்று சேர்ப்பு

புதுடெல்லி: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டர் இன்று விமானப்படையில் சேர்க்கப்படுகிறது. இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தால், நாட்டின் விமானப்படை, ராணுவத்துக்கு வலுசேர்க்க அனைத்து காலநிலையிலும், இரவு நேரத்திலும் தாக்கும் திறன் கொண்ட 15 இலகு ரக ஹெலிகாப்டர்கள் ரூ.3,887 கோடி மதிப்பில் முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் விமானப்படைக்கு 10, ராணுவத்துக்கு 5 ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட உள்ளன.

சியாச்சின், லடாக் உள்ளிட்ட உயரமான மலை பகுதிகளில் உள்ள பதுங்கு குழிகளை தகர்க்க, காடுகள் வழி ஊடுருவல்களை தடுக்க இந்த கவச பாதுகாப்பு கொண்ட ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதில், அதிநவீன ஏவுகணைகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளன.  இந்த ஹெலிகாப்டர்கள் இன்று விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது. முதல் கட்டமாக இவை, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளது.

Related Stories: