காந்தி ஜெயந்தியையொட்டி கல்லணையில் நாட்டியாஞ்சலி; 1,000 கலைஞர்கள் பங்கேற்பு

திருவெறும்பூர்: காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சி கல்லணையில் பசுமையும், பரதமும் நாட்டியாஞ்சலி நடந்தது. இதில் 1,000 கலைஞர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை சுற்றுலா தளங்களில் ஒன்றாகவும், திருச்சி- தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் பாலமாகவும் விளங்குகிறது. இந்த கல்லணை, கரிகால சோழனால் 2,000 ஆண்டுகளுக்கு முன் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. நவீன வசதிகள் இல்லாத காலத்தில் கட்டப்பட்ட கல்லணை இன்றும் தமிழர்கள் மற்றும் சோழர்களின் பெருமையை பறைசாற்றுகிறது.

கல்லணையில் காந்தி ஜெயந்தி நாளான நேற்று காலை தமிழக பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் பசுமையும் பரதமும் நாட்டியாஞ்சலி நடந்தது. நிகழ்ச்சியை தஞ்சை மேயர் ராமநாதன், திருச்சி மேயர் அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். காவிரி தாய், கரிகால சோழனின் பெருமை, விவசாயம் ஆகியவற்றை போற்றும் வகையில் 3 பாடல்களுக்கு கல்லணை பாலத்தில் விரிக்கப்பட்ட சிவப்பு கம்பளத்தில், 60 நாட்டிய பள்ளிகளை சேர்ந்த 1,000 கலைஞர்கள் பரத நாட்டியம் ஆடி நாட்டியாஞ்சலி செய்தனர்.

Related Stories: