பல்கலையில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்; ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப மற்றும் அலுவலக பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 421 தினக்கூலி பணியாளர்கள் தாங்கள் எந்த நேரமும் பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர்.

எனவே, பல்கலைக்கழகங்களிலும், பிற அரசுத் துறைகளிலும் அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் பணியாளர்களை நியமிக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: