கொரோனா காலத்தில் பணி போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும்; போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடிதம்

சென்னை: கொரோனா காலத்தில் பணிபுரிந்தோருக்கு ஒரு பணிக்கு ரூ.300 சிறப்பு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறைச் செயலருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) பொதுச் செயலாளர் ஆறுமுகநயினார் கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா காலத்தில் பணிபுரிந்தோருக்கு ஒரு பணிக்கு ரூ.300 சிறப்பு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பாக வேலைநிறுத்த நாள்களை பணி நாள்களாக கருத ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அந்த வேலைநிறுத்த நாள்களாக 2012ம் ஆண்டு டிச.18ம் தேதி, 2014ம் ஆண்டு ஜன.26ம் தேதி, மார்ச் 18ம் தேதி ஆகிய நாள்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாள்களில் போராட்டங்கள் நடைபெறவில்லை. எனவே, இந்த நாள்கள் குறித்த கருத்து களைத் தொழிற்சங்கங்களிடம் இருந்து கேட்டுப் பெற வேண்டும். அதன்படி பணிநாள்கள் முறைப்படுத்தப்பட்டு, பணப்பலன்களை வழங்க வேண்டும். ஒப்புக் கொள்ளப்பட்டபடி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைக் கைவிட்டு, அதற்கான பணப்பலன்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: