பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு பேச்சு

டெல்லி: பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்துள்ளார். இந்து மத பண்டிகையான துர்கா பூஜையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், துர்கா பூஜையின் நல்ல நேரத்தில், இந்தியா மற்றும் வெளிநாட்டில் உள்ள நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

துர்கா பூஜை பண்டிகை மூலம் நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் பலப்படுத்தப்பட வேண்டுமென நான் விரும்புகிறேன். நாட்டை மேம்படுத்தும் செயல்பாட்டில் சம பங்கை அளிக்கும் வகையில் பெண்களுக்கு அதிக மரியாதையை அளிக்கும் சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார்.

Related Stories: