தோட்ட வேலியில் சிக்கிய காட்டுமாடு கன்று சிறுத்தை வேட்டையாடியதில் பலி

போடி: போடி அருகே பிச்சாங்கரையில் தோட்ட வேலியில் சிக்கிய காட்டு மாட்டினை சிறுத்தை வேட்டையாடியதில் பலியானது. போடி அருகே மேற்கு மலை தொடர்ச் சியின் மலை அடிவாரத்தில் குரங்கணி மலைச்சாலையில் பிச்சாங்கரை உள்ளது. இந்த காட்டுப் பகுதியில் வன உயிரினங்களான காட்டு மாடுகள், சிறுத்தை, செந்நாய்கள், மான்கள், காடு பன்றிகள் என பல தரப்பட்ட விலங்கினங்களும் அதிகளவில் இருக்கின்றன. தொடர்ந்து வனவிலங்குகள் அதிகம் நடமாட்டம் இருக்க கூடிய இப்பகுதியில் தோட்டம் வைத்து விவசாயம் செய்யும் விவசாயி உரிமையாளர்கள் விவசாய பயி ர்களை விலங்கினங்களிலிருந்து காப்பதற்காக 6 அடி முதல் 10 அடி உயரத்திற்கு சுற்றி இரும்பு வேலி அமைத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

மான்,காட்டு மாடு, காட்டு பன்றி போன்ற வனவிலங்குகள் இறைக்காக செல்லும் போது இந்த வேலிகளில் மாட்டி சிக்கி கொள்ளும் போது அதை பயன்படுத்தி விதமாக சிறுத்தை மற்றும் செந்நாய்கள் கண்டவுடன் அதனை தங்களின் பசிக்கு தின்று விடுவதால் அதிகளவில் உயிரிழந்து வருகிறது. இந்நிலையில் வடக்கு மலை செல்லக் கூடிய பாதையில் உள்ள தனியார் தோட்டத்தில் 10 அடி உயர இரும்பு வேலியில் வேட்டை மிருகங்களிடம் தப்பிக்க முடியாமல் இளம் கன்று ஒன்று வேட்டையாடப்பட்டு உயிரிழந்துவிட்டது. எனவே போடி வனத்துறையினர் அதிகளவில் வனவிலங்குகள் நடமாடக்கூடிய பகுதியில் வைக்கப்பட்ட வேலிகளில் வன விலங்குகள் சிக்காதளவிற்கு வேலி அமைக்க அமைப்பதற்கு விவசாயிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: