திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து இன்டிகோ விமானம் நேற்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த ஆண் பயணியை பிடித்து விசாரித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தனது உள்ளாடைக்குள் 354 கிராம் எடையுள்ள பசை வடிவிலான தங்க கலவையை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பறிமுதல் செய்து பிரித்து எடுத்ததில் 301 கிராம் சுத்தமான தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.15.33 லட்சமாகும். இதைதொடர்ந்து அந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: