பல்வேறு துறை அதிகாரிகளுக்கு சேலம் கலெக்டர் பெயரில் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பும் கும்பல்; சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டராக கார்மேகம் உள்ளார். இவரது படத்துடன் கூடிய டிபி கொண்ட வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து மாவட்டத்தில் பணியாற்றி வரும் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள், இரண்டாம் நிலை அதிகாரிகளின் செல்போன் வாட்ஸ்அப்களுக்கு கடந்த சில நாட்களாக மெசேஜ் வந்த வண்ணமாய் உள்ளது.

அந்த மெசேஜ்களில் முதலில் நலம் விசாரித்துவிட்டு, பிறகு பேச்சுக்கொடுத்து அவசர தேவை இருப்பதால் வங்கி கணக்கு அல்லது ஜிபேயில் பணத்தை அனுப்பும் படி கேட்கின்றனர். இதுதொடர்பாக சில அதிகாரிகள், கலெக்டர் கார்மேகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர், இம்மோசடி கும்பல் குறித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சேலம் சைபர் கிரைம் போலீசார், மோசடி நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: