×

தேசிய விளையாட்டு போட்டி; 2-வது நாளில் தமிழகம் பதக்க வேட்டை

காந்திநகர்: 36வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று தமிழகம் பதக்கங்களை குவித்தது. மகளிர் போல்வால்ட்  பந்தயத்தில் தமிழக வீராங்கனை ரோசி மீனா 4.20 மீட்டர் உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதற்கு முன் 2014ம் ஆண்டில் தமிழகத்தில் வி.எஸ்.சுரேகா 4.15 மீட்டர் உயரம் தாண்டியதே தேசிய சாதனையாக இருந்தது. அதனை 24 வயது ரோசி மீனா தகர்த்தார். இதில் தமிழகத்தின் பவித்ரா வெள்ளி, பாரனிகா வெண்கலப்பதக்கம் வென்றனர். மகளிர் 100 மீ, ஓட்டத்தில் மதுரையைச் சேர்ந்த அர்ச்சனா (11.55 வினாடி) வெள்ளி வென்றார்.

மகளிர் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கீர்த்தனா, கிரிதரணி, அர்ச்சனா அடங்கிய தமிழக அணி வெள்ளி வென்றது. கேரளா தங்கத்தை தட்டிச் சென்றது. ஆடவர் நீளம் தாண்டுதலில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் 8.26 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் வென்றதுடன் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் இலக்கிய தாசன் (10.4 வினாடி), சிவக்குமார் (10.48 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். 400 மீட்டர் ஓட்டத்தில் ராஜேஷ் வெள்ளி கைப்பற்றினார். 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கதிரவன், ஜெயக்குமார், இலக்கிய தாசன், சிவகுமார் ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கம் வென்றது.

Tags : National Sports Competition ,Tamil Nadu Medal Hunt , National Sports Competition; Tamil Nadu medal hunt on day 2
× RELATED கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு...