அச்சிறுபாக்கத்தில் மழைமலை மாதா கோயில் தேரோட்டம்: ஏராளமானோர் கலந்துகொண்டனர்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் அமைந்துள்ள மழைமலை மாதா கோயிலில் 54ம் ஆண்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற நிலையில் வியாழக்கிழமை அன்று சென்னை, மயிலை அருட்பனி மரிய ஆனந்தராஜ், புனித தோமையர் மலை பங்குத்தந்தை ஷைலாக் ஸ்டீபன், ஜான் குரியன், துரைராஜ், கிறிஸ்துராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருவுடல் திருவிழாவில் நற்கருணை ஆராதனை மற்றும் திருப்பலி ஜெபமாலை நிகழ்ச்சிகள் நடைபெறறது. இதில், பங்குத்தந்தை அலெக்சாண்டர், செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குருக்கள் மைக்கேல்ராஜ், மைக்கேல் சுரேஷ், பிரான்சிஸ், வசந்தராஜ், லியோனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும், (சனிக்கிழமை) நேற்று திருத்தேர் திருவிழா நடைபெற்றது.

விழாவில் நிகேல் அதிதூதர், சூசையப்பர், புனித தோமையார், அந்தோனியார், மழைமலை மாதா ஆகிய தெய்வங்கள் வீற்றிருந்த 5 தேர்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை முதல் ஊர்வலமாக மாதா கோயிலை அடைந்தது. இந்த தேர்கள் அனைத்தும் வண்ண விளக்குகள் மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. தேர் வீதி உலாவைக்காண ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவில், மாதா கோயில் வளாகம் அதன் அருகே உள்ள மலைப்பகுதி மேல் உள்ள கோயில் வளாகம் ஆகிய அனைத்து பகுதிகளும் மின்விளக்குகளால் பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மேலும் பங்குத்தந்தை வின்சென்ட் நாதன், அருட்பணி பாக்யரெஜிஸ், செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர்  நீதிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை அருள் தல அதிபர் லியோ எட்வின் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.  விழாவில் செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர். இவர்களின் வசதிக்கென செங்கல்பட்டு, மதுராந்தகத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

Related Stories: