காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட வன்னியர் சங்க கலந்தாய்வு கூட்டம்

செங்கல்பட்டு: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்ட வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் தேர்வு  செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம்செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயிலில் நடைபெற்றது. இதற்கு, முன்னாள் எம்எல்ஏவும் மாநில வன்னியர் சங்க செயலாளருமான திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.மேலும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட வன்னியர் சங்க மாவட்ட ஒன்றிய பேரூர் நகர கிளை நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார்.

அதன் பின்பு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான விருப்ப வேட்புமனு பெறப்பட்டது. இந்நிகழ்வில் வன்னியர் சங்க மத்திய மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, பார்த்தசாரதி உள்ளிட்ட வன்னியர் சங்க முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெறப்பட்ட  விருப்பமனுவைசங்க தலைமையோடு ஆலோசித்து விரைவில் புதிய பொறுப்பாளர்களின் பட்டியல்  வெளியிடப்படும் என மாநில தலைவர். அருள்மொழி கூறினார்.

Related Stories: