சார்பதிவாளர்கள் 26 பேர் உதவியாளர்களாக பதவியிறக்கம்: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி

சென்னை: தமிழகத்தில் 26 சார்பதிவாளர்கள், உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் பிறப்பித்துள்ளார். தமிழக பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் பதிவுத்துறையில் முறைகேடாக பதவி உயர்வு பெற்றவர்களின் பட்டியலை தயாரித்து அவர்களை மீண்டும் பழைய பணிகளிலேயே நியமித்து வருகிறார். அதன்படி மாநிலம் முழுவதும் 26 சார்பதிவாளர்கள் கடந்த 2 ஆண்டுகள் முதல் 3 அல்லது 4 ஆண்டுகள் வரை சார்பதிவாளர்களாக, உதவியாளர்கள் பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருவது தெரியவந்தது. அதில் விருதுநகர் வத்தியிராயிருப்பு சார்பதிவாளர் பதவி இறக்கம் செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளராக நியமிக்கப்படுகிறார்.

அதேபோல சென்னை டிஐஜி அலுவலக சார்பதிவாளர் அனிதா, அதே அலுவலகத்திலும், திண்டுக்கல் மாவட்டம் செந்துறை சார்பதிவாளர் குமரேசன், திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கும், பழனி சார்பதிவாளர் ரமேஷ், பழனிக்கும், வேலூர் 2ம் எண் இணை சார்பதிவாளர் ரமணன், வேலூருக்கும், ஆவடி தற்காலிக இணை சார்பதிவாளர் எழிலரசன், தென் சென்னைக்கும், மதுரை திருமங்கலம் சார்பதிவாளர் கார்த்திகேயன், மதுரை தெற்கு அலுவலகத்துக்கும், அரியலூர் எண் 1 சார்பதிவாளர் தேவகி, அரியலூருக்கும் உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை கிணத்துக்கடவு சார்பதிவாளர் வெங்கிடசாமி, கோவைக்கும், காஞ்சிபுரம் சீட்டு(ம)சங்கம் சார்பதிவாளர் மோகனாம்பாள் காஞ்சிபுரத்துக்கும், பதிவுத்துறை தலைவர் அலுவலக சார்பதிவாளர் கல்யாண கிருஷ்ணன், கடலூருக்கும், கோபிசெட்டிப்பாளையம் புஞ்சை புளியம்பட்டி சார்பதிவாளர் டில்லிபாபு, கோபிசெட்டிபாளையத்துக்கும், விருதுநகர் திருத்தங்கம் சார்பதிவாளர் ஆனந்தன், விருதுநகருக்கும், மத்திய சென்னை சார்பதிவாளர்(வழிகாட்டி) லட்சுமி, பதிவுத்துறை தலைவர் அலுவலகத்துக்கும், கோபிச்செட்டிபாளையம் சத்தியமங்கலம் சார்பதிவாளர் சாந்தி, கோவைக்கும், செய்யார் சார்பதிவாளர்(வழிகாட்டி) ஜெயந்தி செய்யாருக்கும், கன்னியாகுமரி வடசேரி சார்பதிவாளர் மேகலிங்கம், கன்னியாகுமரிக்கும், பதிவுத்துறை சார்பதிவாளர் செந்தில்குமார், அதே அலுவலகத்தில் உதவியாளர்களாக பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், பாளையங்கோட்டை நாசரேத் சார்பதிவாளர் ராமச்சந்திரன், பாளையங்கோட்டை உதவியாளராகவும், பதிவுத்துறை தலைவர் அலுவலக சார்பதிவாளர் சசிதேவி, அதே அலுவலகத்திலும், காரைக்குடி மீமிசல் சார்பதிவாளர் மணிவண்ணன், காரைக்குடிக்கும், கிருஷ்ணகிரி தேன்கனிகோட்டை சார்பதிவாளர் பாஸ்கர், சேலம் மேற்கு பகுதிக்கும், கோவை மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் ஜெசிந்தா, கோவைக்கும், சிங்காநல்லூர் தற்காலிக சார்பதிவாளர் ஜெயசுதா, கோவைக்கும், தஞ்சாவூர் துணைப் பதிவுத்துறை தலைவர் சார்பதிவாளர்(நிர்வாகம்) ஜோதி திருவண்ணாமலைக்கும் உதவியாளராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில்  கூறப்பட்டுள்ளது.

Related Stories: