சிறுநீரக பாதிப்பில் இருந்து குணமாகி மீண்டும் திரையில் தோன்றி மக்களை சிரிக்க வைப்பேன்: காமெடி நடிகர் போண்டாமணி உருக்கம்

சென்னை: காமெடி நடிகர் போண்டாமணியின், 2 சிறுநீரகங்கள் பழுதடைந்த நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன் போரூர் அருகே ஐயப்பன்தாங்கலில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில், போண்டாமணியின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் நலம் விசாரித்தனர்.

பின்னர் அதிமுக சார்பில் போண்டா மணிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி, விரைவில் உடல்நலம் பெற வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் நிருபர்களிடம் போண்டாமணி கூறுகையில், ‘‘ எனக்கு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்க உதவி செய்த முதல்வர், அமைச்சர் மற்றும் டாக்டர்களுக்கு நன்றி. விரைவில் நலம் பெற்று, மீண்டும் திரையில் தோன்றி மக்களை சிரிக்க வைத்து மகிழ்விக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: