மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: த.எ.பிரியதர்ஷினி, காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, தலைமையகம், சென்னை, கா.ஜெயமோகன், காவல் ஆய்வாளர், பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, தஞ்சாவூர் மாவட்டம், ச.சகாதேவன், காவல் உதவி ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, சேலம் மண்டலம், பா.இனாயத் பாஷா, காவல் உதவி ஆய்வாளர், மத்திய நுண்ணறிவு பிரிவு, விழுப்புரம் மண்டலம், சு.சிவனேசன், தலைமைக் காவலர், பாலூர் காவல் நிலையம், செங்கல்பட்டு (அயல்பணி), மத்திய நுண்ணறிவு பிரிவு (அமலாக்கம்), செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய 5 பேருக்கு மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக காந்தியடிகள் காவலர் விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த விருது, முதல்வரால் 2023 குடியரசு தினத்தன்று வழங்கப்படும். விருதுடன், பரிசுத்தொகையாக தலா ரூ.40 ஆயிரம் வழங்கப்படும்.

Related Stories: