அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் 11 பாஜ பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்

பெரம்பூர்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில், வடசென்னையை சேர்ந்த 11 பாஜ பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வடசென்னை மாவட்ட அரசு தொடர்பு பிரிவு பொதுச்செயலாளர் நவீன் குமார், மண்டல தலைவர் விஜய், துணை தலைவர்கள் அகஸ்டின், பார்த்திபன், இளைஞர் அணியை சேர்ந்த லோகேஷ், சரண், சசிகுமார், ஊடக பிரிவை சேர்ந்த வெங்கடேசன், வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த சஞ்சய் உள்ளிட்ட 11 பேர் நேற்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை அவரது இல்லத்தில் சந்தித்து, தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்வின்போது திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பகுதி கழக வட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர் பாஜ அரசு தொடர்பு பிரிவு மாவட்ட பொது செயலாளர் நவீன் குமார் நிருபர்களிடம் கூறுகையில்,  ‘‘திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக உள்ளதால், அதை ஆதரிக்கும் வகையில் திமுகவில் இணைந்தோம். முதலமைச்சர் கடந்த ஒன்றரை வருடத்தில் ஏராளமான சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்துள்துள்ளார். பாஜவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. பொய் கூறுவதற்காகவே ஒரு கட்சி உள்ளது என்றால் அது பாஜதான்,’’ என்றார்.

Related Stories: