வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பேர் சிறையிலடைப்பு

சென்னை: மடிப்பாக்கம் ராம் நகர் 13வது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் பல ஆண்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், விபச்சார தடுப்பு பிரிவு துணை ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில், காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையிலான போலீசார், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தியபோது, அங்கு ஒரு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடப்பது தெரிந்தது.

விசாரணையில், பாலியல் புரோக்கர் பாஷா பாய் என்பவர் தனது கூட்டாளிகளான தேவேந்திரன் மற்றும் சரண்ராஜ் ஆகியோருடன் சேர்ந்து, சென்னைக்கு வேலை தேடி வந்த ஒரு இளம்பெண்ணிடம், நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து, இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரிந்தது. இதையடுத்து, பாலியல் தொழில் நடத்திய சேலம் மாவட்டத்தை சேர்ந்த தேவேந்திரன் (25), வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சரண்ராஜ் (19) ஆகிய 2 பேரை கைது செய்து நீ சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பாஷா பாய் என்பவரை தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட இளம்பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Related Stories: