மாநகர பேருந்து மோதி தூய்மை பணியாளர் பலி

அம்பத்தூர்:  ஆவடி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பேபி அம்மாள் (60). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து பணிமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இதே பணிமனையில் தண்டையார்பேட்டையை சேர்ந்த கோபு (48) என்பவர், மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

நேற்று காலை பேபி அம்மாள் பணியில் ஈடுபட்டிருந்தார். இதை கவனிக்காத கோபு, பேருந்தை பின்னோக்கி இயக்கியதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பேபி அம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.

Related Stories: