நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்

பல்லாவரம்: காரைக்குடியை சேர்ந்த பிரதீப் (32), நேற்று நொளம்பூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தனது சொகுசு காரில் புறப்பட்டார். காரைக்குடியை சேர்ந்த சதிஷ், காரை ஓட்டினார். மதுரவாயல் புறவழிச்சாலையில் திருநீர்மலை அருகே சென்றபோது, காரின் இன்ஜினில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் பிரதீப்பும், சதீசும் காரில் இருந்து கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். அதற்குள் கார் எரிந்து நாசமானது.

Related Stories: