இந்தியன் 2வில் 1920 காலகட்ட கதை

சென்னை: கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்’ படத்தின் 2ம் பாகத்துக்கான படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா என்று அழைக்கப்படும் சேனாபதி, சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் நேதாஜி சுபாஷ்  சந்திரபோசின் இந்திய தேசிய ராணுவத்தில் போர் வீரனாக இருப்பார். ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடுபவராக காட்டப்பட்டிருப்பார்.

தற்போது 2ம் பாகத்திலும் அதுபோன்ற காட்சிகள் இடம்பெறுகிறது. 1920ம் ஆண்டுகளில் சேனாபதி என்ன செய்தார் என்ற கதை இடம்பெறுகிறது. இதற்காக கமல்ஹாசனை அந்த காலகட்டத்துக்கு மாற்றுகின்ற மேக்கப் பணி நடப்பதை, மேக்கப் குழுவில் இருக்கும் ஒருவர் புகைப்படமாக வெளியிட்டுள்ளார். மேலும் அவர், ‘கமல்ஹாசனனை 1920ம் ஆண்டுக்கு மாற்றுகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடக்கிறது. ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், மேலும் உள்ள காட்சிகளை வேகமாக படமாக்கி வருகிறார்கள். ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தில் ஷங்கர் பிசியாக இருப்பதால், ‘இந்தியன் 2’ படத்தின் காட்சிகளை அவரது உதவியாளர்கள் படமாக்கி வருவதாக கூறப்படுகிறது.

Related Stories: