கேதர்நாத் கோயில் அருகே பனிச்சரிவு

டேராடூன்:  உத்தரகாண்டில் கேதர்நாத் கோயில் அருகே பனிச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.  உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற கேதர்நாத் கோயில் அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று காலை கேதர்நாத் கோயிலின் பின்புறத்தில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. நேற்று காலை 6.30மணியளவில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

கேதர்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திரா அஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேதார் டோம் மற்றும் ஸ்வர்கரோகினி இடையே பெரிய பனி பாறை உடைந்து கோயிலுக்கு பின்னால் அமைந்துள்ள சோராபரி ஏரியில் விழுந்தது. எனினும் இதனால் மந்தாகினி மற்றும் சரஸ்வதி ஆற்றின் நீர்மட்டம் உயரவில்லை. எனவே அச்சமடைய வேண்டாம்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

Related Stories: