எலான் மஸ்கின் அதிநவீன ரோபோ அறிமுகம்

நியூயார்க்: உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் அதிநவீன ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. ஆப்டிமஸ் என்று பெயரிட்டுள்ள இந்த அதிநவீன ரோபோ, அறிமுக நிகழ்ச்சியின் போது, தனது வலது பக்கத்தில் நின்றிருந்த மஸ்கை பார்த்து கை அசைத்தது. அலுவலகம் மற்றும் வீட்டு வேலைகளை செய்யும் இந்த ரோபோவை சுமார் ரூ.16 லட்சத்துக்கு விற்பனை செய்ய மஸ்க் முடிவு செய்துள்ளார்.

எந்த ஆதரவும், கிரேன்கள், இயந்திர வழிமுறைகள் அல்லது கேபிள்கள் இல்லாமல் வேலை செய்வது இதுவே முதல் முறை என்று அவர் கூறியுள்ளார். இது வைபை மற்றும் எல்டிஇ இணைப்பைக் கொண்டுள்ளது. இந்த ரோபோவால் 9 கிலோ எடை கொண்ட பொருட்களை தூக்க முடியும்.

Related Stories: