புது நாடாளுமன்றம் கட்டிடத்துக்கு கலாம் பெயர் தமிழக இளைஞர்கள் மோடிக்கு தபால் அனுப்பினர்

சென்னை: புதிய நாடாளுமன்றம் கட்டிடத்துக்கு அப்துல் கலாம் பெயர் வைக்க கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பினர்.

ஒன்றிய அரசு புதிதாக திறக்க உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உருவ சிலையோடு, அவரது பெயரை சூட்ட வேண்டும். இதனை தமிழகத்தின் பெருமையை உணர்ந்து அறிவிக்க வேண்டும்.

அக்டோபர் 15 ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தினத்தை ஒன்றிய அரசு தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இளைஞர்கள் சங்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தபால் அனுப்பப்பட்டது. சென்னை அண்ணா சாலை தபால் நிலையத்தில் தமிழ்நாடு இளைஞர்கள் சங்க மாநில தலைவர் எம்.எம்.ஆர்.மதன் தபால் அனுப்பினார். அவருடன் ஏராளமான இளைஞர்கள் தபால் அனுப்பினர். இதே போல தமிழகம் முழுவதும் பிரதமருக்கு இளைஞர்கள் சங்கம் சார்பில் தபால் அனுப்பப்பட்டது.

Related Stories: