நேர்மையான அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் முறையாக வழங்க வேண்டும்; விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த கோபால் வேளாண் உதவி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். கூட்டுறவு சங்கத்தில் கடன் நிலுவையில் இருந்ததால், அவருக்கு ஓய்வூதியம் வழங்கவில்லை. இதனால் அவரது குடும்பம் வறுமைக்கு தள்ளப்பட்டதோடு அவரது மகன் தற்கொலை செய்து கொண்டார்.கோபாலின் 2 மகள்களுக்கும் 40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாமல் கூலி வேலைக்கு செல்கிறார்கள். இதனால் விரக்தி அடைந்த அவர், வீட்டை விட்டு வெளியேறி கோயில்களில் பிச்சை எடுத்து பிழைத்து வருகிறார்.

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிடும் அளவுக்கு தமிழக அரசு மெத்தனமாக இருப்பது கண்டனத்துக்குரியது. இனியாவது நேர்மையான அரசு அதிகாரிகளை தமிழக அரசு அங்கீகரிக்க வேண்டும். உண்மையில் உழைக்கும் அரசு அதிகாரிகளுக்கு உரிய ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட உதவிகளை தமிழக அரசு முறையாக வழங்க வேண்டும். முதியவர் கோபாலுக்கு ஓய்வூதிய தொகையை தமிழக அரசு உடனடியாக அளிக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

Related Stories: