கடந்த மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.11 லட்சம் கோடி

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த மாதத்தில் யுபிஐ மூலம் ரூ.11.16 லட்சம் கோடிக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை நடந்துள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கிராமங்கள் வரை சென்றடையக் காரணமாக இருந்தது யுபிஐ தான்.   கட்டணமில்லா சேவை என்பதால் கூகுள் பே, போன் பே போன்ற ஆப் கள் மூலமாக யுபிஐயை பயன்படுத்தி பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேசிய பரிவர்த்தனை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாடு முழுவதும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.10.73 லட்சம் கோடியாக இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மதிப்பு ஒரே மாதத்தில் ரூ.11.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது  ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 3 சதவீதம் அதிகம். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டில் இது ரூ.657 கோடியாக இருந்தது. கடந்த ஜூலையில் யுபிஐ பரிவர்த்தனை ரூ.10.62 லட்சம் கோடி ஆகும்’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: